மீண்டும் மாலதி 1

அந்த
கதையில் கடைசி நிமிட
வரிகள் உங்கள் அனைவரின் கவனத்திற்கு
நான் கண் விழித்த போது வானத்தில் லேசான வெளிச்சக் கீற்று பரவியிருந்தது. பஸ் எங்கோ நெடுஞ்சாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
நான் அருகில் என் தோளில் சாய்ந்து நன்கு தூங்கிக் கொண்டிருந்த சுதாவின் தலையில் முத்தமிட்டேன். அவள் அசைந்து நன்றாக என் மீது சாய்ந்து தூங்கினாள். சிறிது நேரத்தில் வெளிச்சம் பரவி விடிந்தது.
அப்போதும் அது எந்த இடம் என்று தெரியவில்லை. சுதா கையிலிருந்த வாட்சில் மணி பார்த்தேன். ஆறு ஆகியிருந்தது. மீண்டும் ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். எதிரே வந்த வாகனங்கள் சர்ரென்று கடந்து போகும் சத்தம் என் காதை இறைத்தது.
சாலையோரப் புளிய மரங்களை பார்த்தபடி இருந்தேன். அப்போது என் காது அதிரும்படியாக ஒரு பெரும் சத்தம்.
'டம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்..'
சில நொடிகள் காது கேட்காதது போல் சத்தங்கள் அடங்கியது. பெரும் இருட்டு கண்களை மறைத்தது. என் நெஞ்சில் பெரும் பாரத்தை இறக்கியது போலிருந்தது. எவ்வளவு நேரம் போனது என்ன ஆனது ஒன்றும் புரியவில்லை.
ஏதேதோ மக்களின் இரைச்சல் சத்தம் கேட்டது.
'த்ச்.. த்ச்.. ச்சே பாக்கவே முடியலப்பா..'
'ஸ்ஸ்.. அய்ய்யோ.. அங்க பார்ரா.. ச்ச..'
'ஐயோ.. எம் புள்ள... இஹ்ஹா..'
'ப்ளீஸ்ஸ்.. ஹெல்ப் மீ..'
'இந்தாப்பா.. வேடிக்க பாக்காம ஒரு கை புடிங்கப்பா..'
'ஏய்ய்யேய்.. யாருப்பாது குழந்தையெல்லாம் தூக்கிட்டு இங்க வராதய்யா. பாக்கவே கண்றாவியாருக்கு. அந்தப் பக்கம் போ.'
'டேய் மாப்ள. எப்படியும் ஏழெட்டு போயிருக்கும்னு நெனக்கிறேன். பாவம்டா.'
'ஆமா சார். ஹைவேலதான். நான் ஸ்பாட்லதான் இருக்கேன். ஆமா. பெரிசுதான்.'
'ஹலோ.. போன்ல பேசுனது போதும் வாங்க இங்க ஒரு சின்ன புள்ள இருக்கு தூக்குங்க. ஹெல்ப் பண்ணுங்க.'
குரல்கள் எங்கோ தூரத்தில் கேட்பது போலிருந்தது. என் கண்களில் காட்சிகள் தெளிவாயில்லை. பாதி திறந்த ஜன்னல் கண்ணாடி மட்டுமே தெரிந்தது. உடலை அசைக்க முடியவில்லை. என் செல்போன் அலறியது கேட்டது.
'அதோ அந்த நதியோரம்..'

மாலதியின் முகம் என் மனக்கண்ணில் வந்து போனது. 'நான் எங்கிருக்றேன். சுதா எங்கே? என்ன ஆச்சு?' புரியாமல் தவிப்பது போல் இருந்தது. என் விரலைக் கூட அசைக்க முடியவில்லை. பார்வையையும்தான். ஜன்னல் கண்ணாடியிலேயே அது நிலைத்திருந்தது. அதில் சில ரத்தத் துளிகள் தெறித்திருந்தன. 'அவை என்னுடையவையா?'
'ஹே.. இங்க வாங்கப்பா இங்க ஒரு ஆள் கிடக்கிறான். தூக்குங்க.' (ஒரு குரல் அருகில் கேட்டது.)
'உயிர் இருக்கா?'
'தெரியல. பட் ரத்தம் நெறய போயிருக்கு.'
'ஓ.. இந்தாளு கூட ஒரு லேடி இருந்தாங்க. இப்பதான் அந்தப் பக்கம் ஆளுங்க தூக்கினாங்க. வைப்பா இருக்கும் போல. பாவம்.'
'ஓ. அந்தம்மாவுக்கு உயிர் இருந்துச்சா.?'
'ஆமா. அதுக்கு ரொம்ப அடியில்ல. ஆனா மயங்கித்தான் கெடந்துச்சு. ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு இருந்தாங்க.'
'சரி சரி. ஆள தூக்குங்கப்பா.'
ஜன்னலில் நிலைத்திருந்த பார்வை எங்கெங்கோ பஸ் இருக்கை, மேற்புறத்தில் இருந்த பல்புகள், டிவி, உடைந்து போயிருந்த இடிபாடுகள் என்று எங்கெங்கோ சுற்றியது.
'ஹே.. இங்க பாரு இவன. பேண்ட்ல ஜிப் போடாம தூங்கிருப்பான் போல. வெளில தொங்கிட்டுருக்கு.'
'அடச்சே.. அதுவாய்யா இப்ப முக்கியம். தூக்குங்கப்பா. கீழ இறக்கலாம்.'
'ஆவ்வ்வ்.. முடியல முடியல.. கொஞ்சம் கீழ வைங்கப்பா. பொண கணம் கணக்குறான்.'
மீண்டும் என் பார்வை பஸ்சில் தரையில் கிடந்த சிவப்பு நிற பேக்கில் நிலைத்தது. மீண்டும் என் செல்போன் ஓசை.
'அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்.
இதோ இந்த வனமெல்.'
அத்துடன் சத்தம் நின்றது. எல்லாக் குரல்களும் அடங்கி நிசப்தம் மட்டுமே என் காதுகளை அடைத்தது. கண்ணில் தெரிந்த பேக்கும் இப்போது தெரியவில்லை. எங்கும் இருட்டு. எதையும் என்னால் உணர முடியவில்லை.
நான் இறந்து விட்டிருந்தேன்.

Comments
Post a Comment